தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெண் குயின் படத்தில் நடித்துள்ளார்.
சம்பளத்தைக் குறைக்க முடிவுசெய்த 'பெண் குயின்'! - பெண்குயின் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை குறைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாக உள்ளது. கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கீர்த்தி சுரேஷ் கேரளாவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அதுமட்டுமல்லாது பள்ளிப் பருவத்தில் இருந்து கற்றுவரும் வயலின் பயிற்சியை தற்போது மீண்டும் செய்துவருகிறார். மேலும் மன அழுத்தத்தைப் போக்கும்விதமாக யோகாவும் செய்துவருகிறார்.
கரோனா தொற்று காரணமாக திரை உலகம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துவருகிறது. நடிகர்களில் சிலர் ஏற்கனவே தங்களது ஊதியத்தில் பாதி குறைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இனித்தான் நடிக்கவிருக்கும் படத்தின் சம்பளத்தில் 20 முதல் 30 விழுக்காடு வரை குறைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.