தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோகன் லால் பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு - kunjali marakkar movies

கரோனா பரவல் காரணமாக நடிகர் மோகன் லால் நடித்துள்ள ’குஞ்சலி மரைக்காயர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மோகன் லால்
மோகன் லால்

By

Published : Apr 28, 2021, 8:22 AM IST

கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம், ’குஞ்சலி மரைக்காயர்'.

மலையாளத் திரையுலகின் வெற்றிக் கூட்டணியாகக் கருதப்படும் இயக்குநர் ப்ரியதர்ஷன் - நடிகர் மோகன் லால் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.

படத்தில் மோகன்லாலுடன், நடிகர்கள் பிரபு, அர்ஜுன், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், மஞ்சு வாரியர், சுஹாசினி, அசோக் செல்வன், இன்னோசன்ட் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் ’குஞ்சலி மரைக்காயர்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக இப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'ஆர்ட்டிக்கிள் 15' தமிழ் ரீமேக்: உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஆரி!

ABOUT THE AUTHOR

...view details