இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் தளபதி விஜய்க்கு, கீர்த்தி சுரேஷ் நடனமாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்து செய்தியை வித்தியாசமான முறையில் பதிவு செய்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தனது தம்பியுடன் இணைந்து விஜய்யின் பிரபல பாடலான ‘ஆல்தோட்ட பூபதி’-க்கு ஆட்டம் போட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இதில் சிம்ரன் விஜய்யோடு மாஸாக டான்ஸ் ஆடியிருப்பார்.
கடந்த விஜய் பிறந்தநாளுக்கு ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் இசைத்து கீர்த்து அசத்தினார். தற்போது இந்த டான்ஸ் பெர்ஃபார்மன்ஸை அளித்துள்ளார்.