தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

3 நடிகர்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

By

Published : Sep 22, 2021, 2:50 PM IST

ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையான இவர் அதனைத் தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தொடரி', 'பைரவா' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பிறகு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்குத் தங்கையாகவும், 'சாணிக்காகிதம்' படத்தில் செல்வராகவனின் தங்கையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஜித் ரசிகாஸ்.... இதோ வலிமை ரிலீஸ் தேதி

ABOUT THE AUTHOR

...view details