இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் கீ. சயின்ஸ் பிக்சன் மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கலகலப்பு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
நாயகியை மிரட்டும் ஹேக்கர் வில்லன் - கீ படத்தின் ஸ்னீக் பீக் - Kee movie second
ஜீவா நடித்திருக்கும் 'கீ' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி பார்ப்பவரை பதைபதைக்க வைக்கிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பயங்கர டிரெண்டிங் ஆனது. கீ படம் சமூக கருத்துள்ள படமாகவும் டெக்னாலஜி வளர்ச்சியால் இளைஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் படமாக உருவாகியுள்ளது. மேலும், இப்படம் நாளை மறுநாள் வெளியாவதால் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.