இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஹோட்டல் சவேராவில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழா மேடையில் பேசிய நடிகை சுகாசினி, மூன்று முடிச்சு படம் எங்கள் வீட்டில் தான் எடுக்கப்பட்டது. அப்போது தான், நான் முதன் முறையாக ஷூட்டிங்கை பார்க்கிறேன்.
ரஜினிக்கு நடிக்க மட்டும் இல்லை எதுவும் தெரியாது - சுகாசினி - 90th birthday
சென்னை: 'ஒன்றுமே தெரியாமல் நடிக்க வந்த ரஜினிகாந்த்தை நடிக்கும் சிற்பியாக மாற்றியது இயக்குநர் கே.பாலசந்தர்தான்' என்று சுகாசினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் ரஜினிக்கு மிகவும் பயம். புதுமுகம் என்பதால் யாருடனும் ஒட்டாமல் தனியாக எங்கள் வீட்டின் கேட் முன்பு நின்று சிகரெட் பிடிப்பார். அந்த காட்சிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. ரஜினி நடிக்கும்போது லுக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
என்னுடைய கையை வைத்து தான் அவரது பார்வையை சரி செய்வார்கள். அந்த அளவிற்கு சினிமா எதுவுமே தெரியாமல் நடிக்க வந்த ரஜினிகாந்திற்கு ஒரு கல்லூரியாக சர்வ கலாசாலையாக இருந்தது கே.பாலச்சந்திரன் கவிதாலயா நிறுவனம் தான். இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒரு தீர்க்கதரிசி என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.