கிருஷ்ணா நடிப்பில், 2012ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு. இதற்கு சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
இதையடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். கன்னடத்தில் வெளியான 'பெல் பாட்டம்' படத்தைத் தழுவி இப்படம் தமிழில் உருவாகிறது. மேலும் இதில் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கவுள்ளார்.