கே. பாலசந்தர் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் 1991ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியான படம் அழகன். இந்த படம் இன்றுடன் (டிசம்பர் 15) 29 வருடங்களை நிறைவு செய்துள்ளது. தன் கடின உழைப்பால் முன்னேறிய ஓட்டல் அதிபர் அழகப்பன், தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மனைவியை இழந்த அழகப்பனின் வாழ்வில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் வருகின்றனர்.
'அழகன்' மம்மூட்டிக்கு காட்சி விளக்கும் 'இயக்குநர் சிகரம்' பாலசந்தர்! - அழகன் பட பாடல்கள்
மம்மூட்டி நடிப்பில் வெளியான 'அழகன்' படப்பிடிப்பின் போது கே.பாலசந்தர் காட்சியை விளக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
!['அழகன்' மம்மூட்டிக்கு காட்சி விளக்கும் 'இயக்குநர் சிகரம்' பாலசந்தர்! azaghan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9888967-623-9888967-1608040172579.jpg)
துறுதுறு கல்லூரி மாணவியாக மதுபாலா, சின்ன சின்ன பொய்களால் வாழ்கையை இளமைக்கே உரித்தான பாணியில் வாழ்ந்து வருகிறார். டுடோரியல் ஆசிரியான கீதா படிப்பே தனது வாழ்க்கையாக கொண்டு வாழ்கிறார். மூன்றாவதாக பானுப்பிரியா நடனமே தன் வாழ்க்கையாக கொண்ட கோபமுள்ள கலைஞர். இதில் மம்மூட்டியும் பானுப்பிரியாவும் காதலிக்கின்றனர். ஆனால் வயது வித்தியாசம், மனைவியை இழந்தவர் என்பதால் பானுப்பிரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பும். இருந்தபோதும், இந்த மூன்று பெண்களுமே அழக்கப்பனை காதலிப்பார்கள். மற்ற இருவரும் இவர்கள் காதலுக்கு ஏற்படும் இடையூறுகளை நிவர்த்தி செய்து அவர்களை சேர்த்துவைப்பது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி அறிமுகமாகி அவர் இசையமைத்த சங்கீத சுவரங்கள், சாதிமல்லி பூச்சரமே உள்ளிட்ட இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் ஹிட் அடித்தன.
கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது ட்விட்டர் பக்கத்தில், அழகன் படப்பிடிப்பில் மம்மூட்டிக்கு கே. பாலச்சந்தர் காட்சி குறித்து விளக்கும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.