தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டைம் என்ன பாஸ்' கவிதாலயாவின் முதல் வெப்சீரிஸ்! - கவிதாலயா வெப் சீரிஸ்

சென்னை: இயக்குநர் பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளது.

கவிதாலயா
கவிதாலயா

By

Published : Sep 15, 2020, 11:56 AM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனநரான பாலச்சந்தரின் சொந்த தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான 'நெற்றிக்கண்' படம் கவிதாலயாவின் படம் ஆகும்.
இதன்பின் இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தது. படத்தயாரிப்பு மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
தொலைக்காட்சியை தொடர்ந்து கவிதாலயா இணையத்திலும் நுழைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 'ஹார்மோனி வித் ஏ. ஆர். ரஹ்மான்' என்னும் நிகழ்ச்சி கவிதாலயாவின் இணையத்தில் முதல் நிகழ்ச்சியாகும்.
இந்நிலையில், 'டைம் என்ன பாஸ்' என்ற புதிய வெப் சீரிஸ் ஒன்றை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. பரத், ப்ரியா பவானி சங்கர், ரோபோ ஷங்கர், கருணாகரன், அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காலப் பயணம் செய்யக்கூடிய ரூம்மேட்களுடன் நீங்கள் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை மையக்கருவாக வைத்து இந்த சீரீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details