சென்னை: ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'காவல்துறை உங்கள் நண்பன்' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது.
பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்துக்குத் தேவையான கருத்தை அழுத்தமாகக் கூறும் படைப்பாகத் தயாராகியிருக்கும் படத்தை இயக்குநர் ஆர்டிஎம் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர் படம் குறித்து பேசினார்கள்.
நடிகர் மைம் கோபி பேசியதாவது:
உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஆர்டிஎம் மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாகத் திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி.
சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டுத்தனமாக அவர் மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும்.
படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். கிளைமேக்ஸ் காட்சி பலரையும் அதிரவைத்து, மனத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றார்
கதாநாயகன் சுரேஷ் ரவி பேசியதாவது: