தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திய மேடையில் முதல்முறையாக அமெரிக்க பாப் பாடகி..! - இந்தியாவில் கேட்டி பெர்ரி

மும்பை: அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகி இந்திய மேடையில் முதல்முறையாக ஒன் ப்ளஸ் இசைத் திருவிழாவில் பாடவுள்ளார்.

கேட்டி பெர்ரி

By

Published : Aug 28, 2019, 11:06 PM IST

கேட்டி பெர்ரி அமெரிக்காவின் முன்னணி பாப் பாடகியாவார். இவர் பல பாடல்களை எழுதி பாடியுள்ளார். மேலும், இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு கேட்டி வெளியிட்ட ‘ டீனேஜ் ட்ரீம்’ என்ற ஆல்ப பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. இதனால், இவருக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது.

கேட்டி பெர்ரியின் டீனேஜ் ட்ரீம்

இந்நிலையில், கேட்டி பெர்ரி முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரவிருக்கிறார். ‘ஒன் ப்ளஸ்’ மொபைல் நிறுவனம் நடத்தும் இசைத் திருவிழாவில் பங்கேற்று பாடவுள்ளார். நவம்பர் மாதம் 16ஆம் தேதி மும்பையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக இந்திய மேடையில் கேட்டி பாடப் போகிறார்.

ஒன் ப்ளஸ் இசைத் திருவிழா

இதுகுறித்து பேசிய கேட்டி பெர்ரி, “இந்திய மேடையில் முதல்முறையாக நான் பாடப்போவது எனக்கு பெரு, மகிழ்ச்சியளிக்கிறது. ஒன் ப்ளஸ் இசைத் திருவிழாவில் என்னுடைய நிகழ்ச்சிதான் முதல்முதலாக நடைபெற உள்ளது” என்று கூறினார். மேலும், இந்தியாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களை, ’காத்திருங்கள்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details