ரோர் (Roar), லாஸ்ட் ஃப்ரைடே நைட் (Last Friday Night), ஈ.டி (E.T), ஃபயர் வொர்க் (Fire work) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்களின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாப் இசை உலகில் ராணியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கேட்டி பெர்ரி.
உலகமெங்குமுள்ள பாப் இசை ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வரும் கேட்டி பெர்ரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு கேட்டி வெளியிட்ட ‘ டீனேஜ் ட்ரீம்’ என்ற ஆல்பம் உலக அளவில் பெரும் ஹிட்டடித்தது. இதனால், இவருக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடிகர் ஆர்லாண்டோ ப்ளூம் என்பவரை இவர் காதலித்து வருகிறார். தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தத் தம்பதியினர் யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கேட்டி பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். அக்குழந்தைக்கு டெய்ஸி டோவ் ப்ளூம் என பெயர் வைத்துள்ள கேட்டி, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்கள் மகளின் பாதுகாப்பான, ஆரோக்கியமான வருகையிலிருந்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அன்புடனும் இருக்கிறோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று எங்களுக்குத் தெரியும்” என ட்வீட் செய்துள்ளார்.
பெண் குழந்தைக்குத் தாயான கேட்டி பெர்ரி! - குழந்தைக்கு தாயான கேட்டி பெர்ரி
வாஷிங்டன் : பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கேட்டி பெர்ரி
இந்த ட்வீட்டில், தானும் ஆர்லாண்டோவும் குழந்தையின் கையைப் பிடித்திருப்பதை போன்ற கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.