தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெங்களூர் இனோவேட்டிவ் விழாவில் விருது வென்ற கட்டில் - கட்டில் திரைப்படம்

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் கட்டில் திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

கட்டில்
கட்டில்

By

Published : Oct 18, 2021, 5:22 PM IST

இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் பெங்களூருவில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நேற்று (அக்.17) நிறைவடந்தது.

அதில் 20 நாடுகளிலிருந்து, 30 மொழிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அந்தவகையில் தமிழில் கட்டில், கர்ணன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் வென்றுள்ளது. இந்த விருதை படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு பெற்றார்.

கட்டில்

அவரே இயக்கி நடித்த இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள கட்டில் படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பெங்களூர் இனோவேட்டிவ் விழாவில் விருது வென்ற கட்டில்

இதுதவிர நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

இதையும் படிங்க:பெங்களூர் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிடப்படும் 'கட்டில்'

ABOUT THE AUTHOR

...view details