தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு 'கட்டில்' திரைப்படம் தேர்வு! - புனே சர்வதேச திரைப்படவிழா

சென்னை: புனேவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்' திரைப்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

kattil
kattil

By

Published : Mar 9, 2021, 7:39 PM IST

இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு இயக்குநராகவும் கதாநாயகனாகவும் நடித்த படம் 'கட்டில்'. கட்டிலை மையமாக வைத்து உருவாகிய இப்படத்தில் சிருஷ்டி டாங்கே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு, புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு 'கட்டில்' தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இது குறித்து கணேஷ் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "ஆண்டுதோறும் மகாராஷ்டிரா அரசு நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வுசெய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது 'கட்டில்' திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தருணத்தில் புதுமுயற்சியாக 'கட்டில் திரைப்பட உருவாக்கம்' என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் 'கட்டில்' திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பை தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் 'கட்டில்' எப்படி உருவானது என்பதைச் சொல்வதே இந்த நூலின் நோக்கம். கட்டிலில் பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் இந்த நூல் நிரம்பிவழிகிறது.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர் அன்னம், ‘மெட்டிஒலி’ சாந்தி, 'காதல்' கந்தாஸ், சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வைரமுத்து, மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசைமையத்துள்ளார். சித்ஸ்ரீராம் பாடல் ஒன்று பாடியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details