வைபவ் நடிப்பில், 2019ஆம் ஆண்டு வெளியான 'சிக்சர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'யாமிருக்க பயமேன்' பட இயக்குநர் டீ. கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படத்தில் வைபவ் தற்போது நடித்துள்ளார்.
வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - கிறிஸ்துமஸ் வெளியீடு
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ’காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வைபவுடன் இணைந்து இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், மணாலி ரத்தோர், ரவி மரியா, கருணாகரன், ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படம் தற்போது கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ஓடிடி உரிமத்தை 'ஜீ5' நிறுவனம் வாங்கியுள்ளது.