தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - கோலிவுட் செய்திகள்

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ’காட்டேரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காட்டேரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
காட்டேரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Mar 5, 2020, 8:33 PM IST

கடந்த ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான 'சிக்சர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் டீ. கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படத்தில் வைபவ் தற்போது நடித்துள்ளார்.

காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வைபவுடன் இணைந்து இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், மணாலி ரத்தோர், ரவி மரியா, கருணாகரன், ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

’காட்டேரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் தள்ளிப்போன பொன் மாணிக்கவேல் பட வெளியீடு தேதி

ABOUT THE AUTHOR

...view details