ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 'கத்தி' படம் மாபெரும் ஹிட்.
'கத்தி' ரீமேக்கில் அக்ஷய் குமார்!
விஜய் நடித்த 'கத்தி' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய முடிவெடுத்த நிலையில், அப்படத்தில் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். 'அழகிய தமிழ் மகன்' படத்திற்கு பிறகு விஜய் இரண்டு வேடமிட்டு நடித்திருந்தது பலராலும் வரவேற்கப்பட்டது. விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காவும் கார்பரேட் கம்பெனிகளிடம் போராடி கிராமத்தை மீட்டு கொடுக்கும் கதாபாத்திரத்தில் விஜய் அசத்தலாக நடித்திருப்பார்.
இந்நிலையில் தமிழில் மாபெரும் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'கத்தி' திரைபடத்தை இந்தியின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். 'மிஷன் மங்கள்' படத்தை இயக்கியுள்ள ஜகன் சக்தி, 'கத்தி' ரீமேக்கை இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்று படக்குழு கூறியுள்ளது.