மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். தனது அசாத்திய நடிப்பால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தை நிரப்பியிருக்கிறார். கிருமி, விக்ரம் வேதா படங்களைத் தொடர்ந்து இவர் நடித்த பரியேறும் பெருமாள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
விஜய் நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்திலும் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே கதிர் நடிப்பில் உருவாகிவரும் 'சர்பத்' திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.