அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் 'காதம்பரி'. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள, இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகன் அருள், அவரது நண்பர்கள் இணைந்து டாக்குமென்டரி படப்பிடிப்புக்காக, காட்டுப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது.
சிறிய காயங்களுடன் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்குச் செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதால், சந்தேகமடையும் நண்பர்கள் வீட்டை சோதனையிடுகிறார்கள்.