தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டைட்டானிக்' இளவரசியை அலங்கரிக்கப்போகும் இன்னொரு விருது - டொரன்டோ திரைப்பட விழா விருதுகள்

இந்தாண்டு நடைபெறவிருக்கும் டொரண்டோ திரைப்பட விழாவில் நடிகை கேட் வின்ஸ்லெட் ட்ரிப்யூட் ஆக்டர் விருதினை பெற உள்ளார்.

Kate Winslet to receive Tribute Actor Award at TIFF
Kate Winslet to receive Tribute Actor Award at TIFF

By

Published : Jul 17, 2020, 8:55 PM IST

'டைட்டானிக்' படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற நடிகையான கேட் வின்ஸ்லெட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இன்றும் வலம்வருகிறார்.

பல விருதுகள் பெற்ற இவருக்கு டொரண்டோ திரைப்பட விழாவில் (Toronto Film Festival) இன்னொரு விருது காத்துக்கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் ட்ரிப்யூட் ஆக்டர் விருதான (Tribute Actor Award) அந்த விருதினை கேட் பெற இருக்கிறார்.

ஃப்ரான்சிஸ் லீ இயக்கத்தில் வெளியான 'அம்மோனைட்' திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த விருதினை கேட் பெறுகிறார். இந்தத் திரைப்படத்தில் கேட் வின்ஸ்லெட் மேரி அன்னிங் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாய்ரஸ் ரோனன் நடித்தார்.

இது குறித்து டொரண்டோ திரைப்பட விழாவின் நிர்வாக இயக்குநரும், இணைத் தலைவருமான ஜோனா வின்சென்ட் கூறுகையில், "கேட்டின் அட்டகாசமான கவர்ந்திழுக்கும் திரைத் தோன்றல் நடிகர்களையும் பார்வையாளர்களை மட்டுமல்லாது நடிகர்களையும் வசீகரித்து மகிழ்விக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'இந்த குணங்கள் இருப்பவர்களிடம் விலகி இருக்கவும்' - அமிதாப்பச்சன்!

ABOUT THE AUTHOR

...view details