தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உண்மையான விஜய் ரசிகர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள் - கஸ்தூரி

பிகில் படம் எத்தனை சாதனைகளை செய்தாலும் இந்த படத்தை நினைக்கும்போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக்கொண்டே இருக்கும்.

By

Published : Oct 25, 2019, 11:03 PM IST

kasturi

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இன்று ஒருவழியாக இந்தப்படம் அறிவித்தபடி திரைக்கு வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தைக் காண திரையரங்குகளில் குவிந்தனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக் காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.

மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக 37 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிகில் படம் எத்தனை சாதனைகளை செய்தாலும் இந்த படத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக்கொண்டே இருக்கும். இந்த சம்பவம் யாருடைய வேலை என்பது தெரியவில்லை. உண்மையான விஜய் ரசிகர்கள் இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க: தல - தளபதி ரசிகர்களின் மோதல் பிரச்னையை முடிக்க நடிகர் ஆத்மா கூறும் ஐடியா

ABOUT THE AUTHOR

...view details