தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவருவதாக சுவரொட்டி அடித்து சாத்தான்குளம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
'இதுக்கெல்லாமா விளம்பரம்? கஷ்டகாலம்' - தமிழ்நாடு காங். தலைமையை சாடும் கஸ்தூரி! - கே எஸ் அழகிரியை சாடிய கஸ்தூரி
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழப்பு சந்தேகத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இறந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வருவதாக ஒட்டப்பட்ட சுவரொட்டியை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
இந்தச் சுவரொட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி, அது குறித்த பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம். காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு மலிவான சாதி அரசியல் வேறு. அது சரி, இந்தப் போஸ்டரில் காணும் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் கரோனா பணிக்கு எவ்வளவு கொடுத்தார்கள்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க... 'சிபிஜக்கு மாற்ற காலம்தாழ்த்துவது இறந்தவர்களுக்கு செய்யும் துரோகம்
'