தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! - kasethan kadavulada shooting

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவந்த ’காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா

By

Published : Aug 23, 2021, 2:02 PM IST

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'காசேதான் கடவுளடா'. கிளாசிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றது. படப்பிடிப்பிற்கு முன்னதாக திட்டமிட்டதுபோல், பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளார் படத்தின் இயக்குநர்.

இதுகுறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், "எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால் 'காசேதான் கடவுளடா' முற்றிலும் வேறானது.

அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் ஆகியோர்தான் காரணம்.

அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் இது சாத்தியமானது. படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளோம்.

இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, புகழ், சுப்பு பஞ்சு, தலைவாசல் விஜய், மனோ பாலா ஆகியோர் நடித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details