தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ’காசேதான் கடவுளடா’ ரீமேக்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

70களின் கிளாசிக் திரைப்படமான ’காசேதான் கடவுளடா’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா

By

Published : Aug 11, 2021, 1:11 PM IST

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, 'காசேதான் கடவுளடா' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'காசேதான் கடவுளடா'.

இப்படத்தை தற்போது, 'சேட்டை' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். 'காசேதான் கடவுளடா' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கி, குறுகிய காலத்திலேயே 80 விழுக்காடு வரை படமாக்கப்பட்டுள்ளது.

’காசேதான் கடவுளடா’ படக்குழுவினர்

இதுகுறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் கூறுகையில், " 'காசே தான் கடவுளடா' படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச் சரியாக நடைபெறுவதற்கு முதல் காரணமாக இருந்தது எனது படக்குழுவினர் தான். அவர்களுக்கு, மனதார என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சிவா. விடிவி ராஜேஷ்

தற்போது படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர், இசை, பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளோம். படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிம்புவுடன் முதல்முறையாக இணையும் கன்னட நடிகை?

ABOUT THE AUTHOR

...view details