சமீப காலமாக ஆந்தாலஜி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவருவதால் பலரும், இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கசடதபற'.
மொத்தம் ஆறு கதைகள் உள்ளடக்கிய இந்தப் படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் எனப் புதுமையாக உருவாக்கப்படவுள்ளது.
இதில் ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். நாயகிகளாக விஜய லட்சுமி, பிரியா பவானி சங்கர், ரெஜினா கஸாண்ட்ரா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.