தமிழ் சினமாவில் அரிதினும் அரிதாக 6 எடிட்டர்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஒன்றாக பணியாற்றியுள்ள படம் 'கசட தபற'. இப்படத்தை 'புலி' படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கியுள்ளார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
முக்கிய கதாபாத்திரங்களில் ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். நாயகிகளாக ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னாள் இப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.