தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இருள் அரசன் ஒடியனின் திகில் சம்பவங்கள்... மிரட்ட வரும் 'கருவு' - karuvu thriller movie first look poster released

முற்றிலும் புது முகங்களால் உருவாக்கப்பட்டுள்ள கருவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

http://10.10.50.85//tamil-nadu/17-August-2021/tn-che-02-karuvu-triller-script-7205221_17082021104547_1708f_1629177347_439.jpg
http://10.10.50.85//tamil-nadu/17-August-2021/tn-che-02-karuvu-triller-script-7205221_17082021104547_1708f_1629177347_439.jpg

By

Published : Aug 17, 2021, 11:04 PM IST

இருள் அரசன் ஒடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’ திரைப்படத்தை ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா ஆர். மேனன் எழுதியுள்ளதோடு, அவரே படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் பல புது முகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான், ஒடியன்.

இருள் அரசன் ஒடியனின் திகில் சம்பவங்கள்

தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல, தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஒடியனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால், இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒடியனைப் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அந்தப் படத்தை போலவே, 'கருவு' படமும் சற்றும் குறைவில்லாத மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

'கருவு' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தின் திகில் மற்றும் த்ரில் காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார், இசையமைப்பாளர் ரோஷன்.

முற்றிலும் புது முகங்களால் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்பட நிறுவனம் அடுத்ததாக 'பாம்பாடும் சோலை சம்பவங்கள்' என்கிற மர்மம், கொலை பின்னணி கொண்ட திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது. 'தி நைட்' எனும் த்ரில்லர் படத்தை இயக்கிவரும் ரங்கா புவனேஷ்வர், இப்படத்தை தமிழில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷெரின்

ABOUT THE AUTHOR

...view details