தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னது திருமணம் முடிந்து விட்டதா?- வதந்தி குறித்து விளக்கமளித்த கார்த்திக் ஆர்யன்! - கார்த்திக் ஆர்யன்

நடிகர் கார்த்திக் ஆர்யன் தனக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக பரப்பப்படும் வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக்
கார்த்திக்

By

Published : Jul 13, 2020, 8:46 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருக்கும் திரைப்பிரபலங்கள் அவ்வப்போது ரசிகர்களுடன் தங்களது ட்விட்டர் பக்கம் மூலம் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் கார்த்திக் ஆர்யன், சமீபத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக் தயங்காமல் பதிலளித்து வந்தார். அந்தவகையில், ரசிகர் ஒருவர் உங்களின் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கார்த்திக், "திருமணத்தை இதுபோன்ற சூழலில் நடத்திக் கொள்ளலாம் ஏனென்றால் செலவு சற்று குறைவாகும்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் இந்த ஊரடங்கில் உங்களுக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்று விட்டதாமே? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கார்த்திக், “கூடிய விரைவில் எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்று வதந்தி பரப்புவார்கள் போல” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details