'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக, படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இருப்பினும், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில் சமீபத்தில், அரசு கூறிய விதிமுறைகளுடன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினர். இதனையடுத்து இன்று இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், "படப்பிடிப்பு முடிந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையைக் கேட்டதிலிருந்து இன்றுவரை இந்தக் கதை எங்களுக்கு உற்சாகத்தை தந்துவருகிறது.
'சுல்தான்' பிரமாண்ட தயாரிப்பு: பண்டிகை வெளியீட்டுக்காக காத்திருப்பு! - சுல்தான் படப்பிடிப்பு நிறைவு
கார்த்தி நடிப்பில் உருவான 'சுல்தான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இதுவரை நான் நடித்திருக்கும் படங்களில் பிரமாண்ட தயாரிப்பு இதுதான். இதில் சிறந்த முயற்சியோடு பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பதிவில், சுல்தான் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நல்லதொரு பண்டிகை வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவால் சமூக வலைதளவாசிகள் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் படம் வெளியாகுமோ என்று எண்ணி கருத்து தெரிவித்து வருகின்றனர்.