நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். சில நாள்களுக்கு முன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அதனைக் தொடர்ந்து அந்தகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஏற்கனவே கரோனா தடுப்பூசி முதல்தவணையை போட்டுக்கொண்ட அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார்.