ரஹ்மான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான த்ரில்லர் திரைப்படம் ‘துருவங்கள் பதினாறு’. இந்தப் படம் வெளியானபோது யார் படத்தின் இயக்குநர் என பலரும் தேடினர். தேடியவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது, 21 வயதேயான கார்த்திக் நரேன் என்பவர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ‘துருவங்கள் பதினாறு’ படத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடினர்.
’துருவங்கள் பதினாறு’ இயக்குநரின் புதிய பட டைட்டில் இதுதான்? - மாஃபியா
’துருவங்கள் பதினாறு’ கார்த்திக் நரேனின் புதிய படத்துக்கான டைட்டில் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக்கின் அடுத்த படத்துக்காக காத்திருந்தபோது ‘நரகாசூரன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சுந்தீப் கிஷான் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சில சிக்கல்களால் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது மூன்றாவது படம் பற்றிய தகவல்கள் வெளியானது.
அருண் விஜய், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் பிரசன்னா ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ‘மாஃபியா’ என பெயரிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.