அருண் விஜய் 2015க்குப் பிறகு சினிமாத்துறையில் சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'என்னை அறிந்தால்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய 'தடம்' படத்தில் நடித்திருந்தார். திரில்லர் கிரைம் கதையாக உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது - ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குநர்களின் கதாநாயகனாக மாறிவரும் அருண் விஜய் தற்போது 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் இயக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் நடித்து வருகிறார்.
அருண் விஜய் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! - karthick naren
அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே வியந்து பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி முடித்தார்.
இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷான் ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். நரகாசூரன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்திக் நரேன், அருண் விஜயை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.