தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய போஸ்டரை வெளியிட்ட 'சுல்தான்' படக்குழுவினர்!

சென்னை: ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்விதமாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

By

Published : Nov 14, 2020, 5:35 PM IST

Updated : Nov 14, 2020, 5:43 PM IST

Sulthan
Sulthan

'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் சமீபத்தில் நிறைவுபெற்றது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து ரசிகர்களுக்கு சுல்தான் படக்குழுவினர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

Last Updated : Nov 14, 2020, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details