தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தம்பி' கார்த்தி பட போஸ்டரை வெளியிட்ட அண்ணன் சூர்யா! - கார்த்தி தம்பி

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் #கார்த்தி20 படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

thambi

By

Published : Nov 15, 2019, 7:06 PM IST

கைதி படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு #கார்த்தி20 என்ற தற்காலிகப் பெயர் வைக்கப்பட்ட இப்படத்திற்கு தற்போது ‘தம்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தம்பி படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை தமிழ் தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் 'பேரலல் மைண்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், ஆன்சன் பால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் ஏற்கனவே நடிகர் மாதவன் இயக்குநர் சீமான் இயக்கத்தில் தம்பி என்னும் படம் வெளியானது என்பது கூடுதல் தகவல்.

ABOUT THE AUTHOR

...view details