வயாகம் 18 ஸ்டுடியோஸ், உடன் 'பேரலல் மைண்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்தியின் அண்ணி ஜோதிகா, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் கார்த்தியுடன் ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு பணிகள் கோவாவில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நடிகர் கார்த்திக்கு அக்காவாக மாறிய ஜோதிகா! - கோவா
கோவா: நடிகர் கார்த்தியுடன் ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படம் கோவாவில் பூஜையுடன் தொடங்கியது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பாபநாசம் திரைப்பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பாபநாசம் படத்தை அடுத்து ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் திரைப்படத்தின் நடிகர் ஆன்சன் பால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.
96 திரைப்படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. படத்தை அக்டோபரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.