தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கார்த்தியின் 'சர்தார்' பட போஸ்டர் வெளியீடு! - சர்தார் பட போஸ்டர்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள 'சர்தார்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

karthi
karthi

By

Published : Apr 25, 2021, 1:46 PM IST

'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இவர் இப்படங்களைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து 'சர்தார்' என்னும் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படம் கார்த்தியின் 22ஆவது படமாகும்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். மித்ரனின் முந்தைய படங்களைப் போலவே இப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை குறித்தான கதையம்சத்தை கொண்டிருக்கும் எனத் தெரியவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details