'சுல்தான்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு! - சுல்தான் டீசர் வெளியாகும் தேதி
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் பொருள்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து படத்தின் டீசர் பிப்ரவரி 1ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிட பட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.