தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கார்த்திக், ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் டீசர் வெளியீடு! - karthi thambi teaser release

நடிகர் கார்த்திக், அவரது அண்ணி ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றுள்ளது.

thambi teaser release

By

Published : Nov 16, 2019, 3:49 PM IST

Updated : Nov 16, 2019, 7:48 PM IST

நடிகர் கார்த்திக் நடித்து சமீபத்தில் வெளியாகிய கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துள்ள தம்பி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாபநாசம் என்னும் வெற்றிப்படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில், கார்த்திக், ஜோதிகா, சத்தியராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் அக்கா-தம்பி பாசத்தைச் சொல்லக்கூடிய படமாகவும் ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்பதை டீசரைப் பார்த்த பின் யூகிக்க முடிகிறது.

96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகியிருப்பது கார்த்திக் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மிஸ்மேட்ச்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Last Updated : Nov 16, 2019, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details