தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை - குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகை பேட்டி - பாண்டி பஜார் காவல்நிலையம்

சென்னை: மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த கர்நாடக நடிகை வம்ஷிகாவுக்கு காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகை
குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகை

By

Published : Oct 17, 2020, 12:22 AM IST

சென்னை கோடம்பாக்கத்தில் அக்டோபர் 15ஆம் தேதி இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுநர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் இருந்ததும், அவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை என்பதும் தெரியவந்தது.

பின்னர் பொதுமக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையத்திற்கு நடிகை வந்தார்.

நடிகை வம்ஷிகா பேட்டி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய அவர், காரின் பதிவு எண் கர்நாடக பகுதியைச் சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான் மது அருந்தினேன், ஆனால் சுய நினைவோடுதான் இருந்தேன். மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுபானத்திற்காக தந்தையை கொலைசெய்த மகன்!

ABOUT THE AUTHOR

...view details