தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமேசான் பிரைமில் வெளியாகும் கர்ணன்! - karnan to be released on amazon prime

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

அமேசான் பிரைமில் வெளியாகும் கர்ணன்
அமேசான் பிரைமில் வெளியாகும் கர்ணன்

By

Published : Apr 28, 2021, 8:11 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் இம்மாதம் வெளியான திரைப்படம் கர்ணன். லால், நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. வழக்கம்போல தனுஷின் நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்தின் வசூல் வெகுவாகப் பாதித்தது. இதனால் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவெடுத்துள்ளார்.

அதன்படி மே 9ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:அதர்வாவின் 'தள்ளிப்போகாதே' படத்துக்கு யூஏ!

ABOUT THE AUTHOR

...view details