பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் லால், நடராஜன், யோகிபாபு, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 'கர்ணன்' படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் கையில் வாள் ஏந்தி, மலையின் உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.