மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இதில், ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
'50 நாள்களைக் கடந்த ’கர்ணன்’ - ரசிகர்கள் கொண்டாட்டம்! - கர்ணன் திரைப்படம்
சென்னை: ’கர்ணன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள்களைக் கடந்துள்ள நிலையில் அதனை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
!['50 நாள்களைக் கடந்த ’கர்ணன்’ - ரசிகர்கள் கொண்டாட்டம்! karnan poster](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:11:27:1622220087-k-dhanus-2805newsroom-1622220059-716.jpg)
karnan poster
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள்களைக் கடந்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து படக்குழு இதனைக் கொண்டாடும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கர்ணன் படத்தின் முழு கதையைச் சொல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.