பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் தன்னுடைய உடல்தோற்றத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரித்திருந்தார். இவரின் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா ஏற்பாட்டில் பேஷன் ஷோ நிகழ்ச்சியொன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரீனா கபூர், கார்த்திக் ஆரியனுடன் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படங்களில் முன்பு இருந்ததை போலவே மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.