திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி, விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் என பல துறைகளில் பிரபலமானவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'காட்டிலிருந்தபோது செய்தி கிடைத்தது' - பத்மஸ்ரீ விருது குறித்து கரண் ஜோஹர் நெகிழ்ச்சி - பத்மஸ்ரீ விருது \
கரண் ஜோஹர் தனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்த நிலையில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அவர் பேட்டியளித்துள்ளர். அதில் அவர், ”நான் இத்தாலியிலுள்ள காட்டிலிருந்தபோது எனக்கு போன் அழைப்பு வந்தது. பொதுவாகத் தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தால் நான் அதை எடுக்கமாட்டேன். ஆனால் இந்த நம்பரிலிருந்து வரும்போது போன் எடுத்துப் பேசினேன். அப்போதுதான் பத்மஸ்ரீ விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
என்னால் அதை நம்பவே முடியவில்லை. பிறகு எனது அம்மாவுக்கு போன் செய்து பத்மஸ்ரீ விருது அறிவித்தது குறித்து கூறினேன். அந்தச் செய்தி கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்” என்றார். கரண் ஜோகர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் புரி ஜெகநாத் இயக்கும் படத்தை தயாரித்துவருகிறார்.
இதையும் படிங்க:இன்குபேட்டரில் அபிஷேக் பச்சன்: 70 புகைப்படத்தை பகிர்ந்த அமிதாப்பச்சன்!