நல்லப் படங்களை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் மக்கள் அப்படத்தை தூக்கி வைத்துதான் கொண்டாடுவார்கள் என்பதற்கு உதாரணம் கரகாட்டக்காரன் என்று சொல்லலாம்.1989 ஜூன் 16ஆம் தேதி வெளிவந்த 'கரகாட்டக்காரன்' திரைப்படம் 425 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் வெற்றி வாகை சூடியது.
இயக்குநர் கங்கை அமரன் இயக்கிய இப்படத்தை விஜயா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வாகை சந்திரசேகர், சண்முகசுந்தரம், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தை எளிய மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். கவுண்டமணி செந்திலின் வாழைப்பழம் காமெடியை இன்றுவரை கொண்டாடி மகிழ்கின்றனர் அனைத்துவகை ரசிகர்களும். எந்த ஒரு ஆடம்பரச் செலவும், பிரமாண்டமும் இல்லாமல், எளிமையான எழுத்து நடையில் நகைச்சுவையுடன் மக்களை மகிழ்ச்சியூட்டிய திரைப்படம் இது.