மலையாளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'கப்பேலா'. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜிலேஷ். இவர் இதுதவிர தமிழில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'நிமிர்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'கப்பேலா' பட நடிகருக்கு விரைவில் டும் டும் டும்! - Actor vijilesh marriage
'கப்பேலா' பட நடிகருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கப்பேலா பட நடிகர்
இந்நிலையில், இவர் தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு திருமணம் முடிவாகியுள்ளது. விரைவில் திருமண தேதியை அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.