அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் 'பிகில்'. விஜய் தந்தை-மகனாக இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து விஜய் 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 64' என பெயர் வைத்துள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய 'தளபதி 64' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதில் விஜய் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றுவருகிறது.
தற்போது இப்படத்தில் நடிகர் பிரேம் குமார் இணைந்துள்ளார். சமீபத்தில் இவர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த செய்தியை அவர் தனது சமூகவலைதளமான ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த 'சர்கார்' படத்தில் நடித்திருந்தார்.