தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘ரஜினி பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும்’ - கபிலன் கலாய்! - kaapaan audio launch

சென்னை: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும் என கவிஞர் கபிலன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கபிலன்

By

Published : Jul 22, 2019, 9:52 AM IST

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால், இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து, கே.வி. ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழா

இந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து, சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கையை கேட்ட சரஸ்வதியே வீணையை தண்டாயுதமாக மாற்றிவிட்டாள் என்றும், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் எனவும் கிண்டலாகப் பேசினார். ரஜினியை வைத்துக்கொண்டே இவர் இவ்வாறு பேசியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

காப்பான் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள்

இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி, நான் பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது; சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details