கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நடிகை நிரஞ்சனி ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்டியை கொண்டாடி உள்ளார்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகனாக துல்கர் சல்மான், நாயகியாக ரிது வர்மா நடித்திருந்தனர். இவர்களின் தோழியாகவும், படம் முழுக்க தோன்றும் கதாபாத்திரத்திலும் நிரஞ்சனி நடித்திருந்தார். படத்தில் ராயல் என்ஃபில்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டியவாறு இவர் தோன்றும் அறிமுக காட்சி உள்பட பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
லாக்டவுன் அறிவிப்பு முன்னரே வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.