மலையாள திரைத்துறையில் ஹீரோவாக வலம் வரும் துல்கர் சல்மான், 'தமிழ் வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். பெண் ரசிகர்களால் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிப்பில் தமிழில் தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் உருவாகியுள்ளது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன், பெல்லி சூப்புலு நடிகை ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியான நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் துல்கர் தனது நண்பர்கள் மட்டும் காதலி ரிதுவுடன் ஆட்டம், பட்டம் என்று ஊர் சுற்றித்திருக்கிறார்.